அஸ்த்ரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

பலாசூர், மே.21: விண்ணில் பறந்துசென்று எதிரி ஏவுகணையை அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சண்டிப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து இரண்டாவது நாளாக இன்றும் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.காலை 10.32 மணியளவில் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) தெரிவித்தது.அஸ்த்ரா ஏவுகணை ஒலியைக் காட்டிலும் விரைவான வேகத்தில் சென்று எதிரி ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் வல்லமை வாய்ந்தது.