சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளே தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்த உடனேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் அட்டை வழங்கப்படும். இந்த பணி நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்கும்.