எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடத்தை 5 பேர் பிடித்து உள்ளனர். இதில் செய்யாறு மாணவி மின்னலா தேவியும் ஒருவர். செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து மின்னலா தேவி 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மாணவி மின்னலா தேவியின் தந்தை மோகன் எம்.டி. பூண்டி கிராம அஞ்சலகத்தில் தபால்காரராக பணிபுரிகிறார். தாய் சாந்தி.
முதலிடம் பிடித்த மாணவி மின்னலாதேவி கூறியதாவது:-
நான் 1 முதல் 5-¢ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன். பண கஷ்டத்தால் 6-ம் வகுப்பு முதல் செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்தனர். எனது தாத்தா ஏழுமலை என்னிடம் மாநிலத்தில் முதலிடம் பிடித்து பத்திரிகையில் உன் படம் வரவேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.
அதற்காக நன்கு படித்தேன். எனக்கு தலைமை ஆசிரியர் அகல்யா, ஆசிரியர்கள் ஊக்கம் அளித்தனர். ஆசிரி யர்கள் என்னை வீட்டுக்கு அழைத்து நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் எனது தோழி களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பது யார்? என்று போட்டி இருந்தது. அதனால் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படித்தேன்.
498 மதிப்பெண் எதிர்பார்த்தேன். ஆனால் 496 மதிப் பெண் எடுத்தது சிறிது வருத்தமாக இருந்தாலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டி.வி.பார்ப் பதை நிறுத்தி விட்டேன். எந்த நேரமும் புத்தகத்துடனேயே இருப்பேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு உயிரை காப்பாற்றுவதில் ஏற்படும் திருப்தி வேறு எதிலும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்யாறு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. தற்போது மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.